கோலிவுட்டில் தொடர்ச்சியாக நல்ல நல்ல படங்களை தயாரித்தும் ரிலீஸ் செய்தும் வருகிறது வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது சுமோ, கிழக்கு ஆஃப்ரிக்காவில் ராஜு, ஜோஷ்வா இமைப்போல் காக்க, மூக்குத்தி அம்மன், துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.

இதற்கிடையே ஒரு ஆந்தாலஜி வகை படத்தை இயக்கவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ‘குட்டி லவ் ஸ்டோரி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன், வெங்கட் பிரபு, ஏ.எல்.விஜய், நலன் குமாரசாமி ஆகிய நான்கு பேரும் இணைந்து இயக்குகின்றனர்.

எந்த காலத்திலும் காதலுக்கு நீங்காத இடம் உண்டு, அப்படிப்பட்ட காதல் படத்தை எனது நிறுவனத்தின் தயாரிப்பில் தயாரிக்க எண்ணினேன். இந்த கதை என் மனதிற்கு நெருக்கமாக அமைந்ததால் வேலையை துவங்கி விட்டேன், விரைவில் படத்தில் நடிக்க இருக்க நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியுள்ளார்...