டோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவரின் பாகுபலி படம் பெரும் வெற்றியை அடைந்ததை தொடர்ந்து ‘RRR’ படத்தை இயக்குறார். இந்த படத்தின் நடிகர்கள் பட்டியலில் மீண்டும் பாலிவுட் நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.

தெலுங்கு, தமிழ் , இந்தி, கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ‘RRR’. ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் லீட் ரோலில் நடிக்கும் இந்த படத்தின் வேலைகள் பல தடைகளை தாண்டி நடைப்பெற்று வருகிறது. இப்படத்தை காண உலகம் முழுவதும் உள்ள ராஜமௌலியின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அண்மையில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை தென்னிந்திய சினிமாவே திரும்பி பார்த்தது. நெருப்பு நீர் என வித்யாசமான கான்செப்டில் வெளியான இப்போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

சமீபத்தில் இப்படத்தில் இருந்து ராம் சரணின் கதாபாத்திர டீஸர் ராம் சரண் பிறந்தநாள் அன்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது. இதனால் jr. என்.டி.ஆரின் கதாபாத்திர டீஸர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் காத்துக்கொண்டு இருந்தார்கள். இந்நிலையில் வரும் 2021 புத்தாண்டு அன்று jr. என்.டி.ஆரின் கதாபாத்திர டீஸர் வெளியாகும் எனவும் அதற்குண்டான பணியில் இயக்குனர் ராஜமௌலி இறங்கி இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.