சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. இந்திய அரசு தங்கள் வங்கிக் கணக்குகளை முடக்கி இருப்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் இயங்கும் சர்வதேச மனித உரிமை அமைப்பு நாட்டில் நடக்கும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து குரல் கொடுத்து அந்த அமைப்பு. 2018 ஆம் ஆண்டில் பெங்களூருவில் உள்ள இதன் தலைமையகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டியது.

நம் லிஸ்ட் இன் வங்கி கணக்குகளை முடக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் இந்தியாவில் தன் செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்திக் கொள்வதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு அறிவித்துள்ளது. அதன் இந்திய நிர்வாக இயக்குனர் அவினாஷ் குமார் அறிக்கை ஒன்றில் இந்த முடிவை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்க முடியாத அளவிற்கு அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அநீதிக்கு எதிரான குரல் தருவதை தவிர தாங்கள் வேறு எதையும் செய்யவில்லை என்று அம்னெஸ்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எங்கள் வங்கி கணக்குகள் முடக்கப்படுவது தற்செயலானவை அல்ல என்றும் அந்த அறிக்கை விமர்சித்துள்ளது. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு சர்வதேச மற்றும் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டுதான் செயல்பட்டு வருவதாகவும் கடந்த 8 ஆண்டுகளில் ஒரு லட்சம் இந்தியர்கள் தங்களுக்கு நிதி வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.

40 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தங்கள் செயல்பாடுகளை ஆதரிப்பதாகவும் அம்னேஸ்டி இன்டர்நேஷனல் குறிப்பிட்டுள்ளது. ஆனால் தங்களின் சட்ட ரீதியான நிதி திரட்டல் செயல்பாடுகள் மோசடி என்று சித்தரிக்க படுவதாகவும் அரசின் செயல்பாட்டின்மையை சுட்டிக் காட்டுவதால் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஆம்னெஸ்டி அறிக்கை சாடியுள்ளது. இந்திய அரசின் பொய்யான குற்றச்சாட்டுகளே தங்கள் நிறுவனம் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள காரணம் என்றும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் விளக்கம் அளித்துள்ளது.