கிசான் முறைகேடு தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவை அமைக்க தமிழக அரசிற்கு பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல நாளை காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் பாஜக சார்பில் மன அளிக்கப்படும் என்றும் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார். பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். பல்வேறு மாவட்டங்களில் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்து இருக்கும் நிலையில் பாஜகவின் மாநிலத் தலைவர் தரப்பிலிருந்து இந்த கருத்து வெளியாகியுள்ளது. பிரதம மந்திரியின் வேளாண் உதவி திட்ட மோசடி நாளை அனைத்து மாவட்ட ஆட்சியனரும் பாஜக நேரில் சந்தித்து மனு அளிக்கிறார்கள்.

இந்தக் இத்திட்டத்தின் மூலமாக ஏறத்தாழ 9.50 கோடி விவசாயிகள் இந்தியா முழுவதும் பயன்பெற்று வருகிறார்கள். அந்தத் திட்டம் விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமான திட்டமாகவே மத்திய அரசு பார்த்து வருகின்றது. உன்னை நிலையில் தமிழகத்தில் குறிப்பாக கடலூர் வேலூர் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் முறைகேடு ஏற்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டது. அதிலும் குறிப்பாக 30 ஆயிரம் பேர் அல்லது 40 ஆயிரம் பேர் புதிதாக இணைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஏற்கனவே மாநில அரசு துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது. இதற்காக ஒரு முக்கிய விசாரணைக் குழுவையும் கேட்டிருக்கிறார்கள்.

இதுதொடர்பாக மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை ஏற்படுத்தி தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தகுந்த கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பணியை விரிவு படுத்தி உண்மையான விவசாயிகளுக்கு மட்டும் உதவி தொகை கிடைப்பதற்கான வழிவகை செய்ய வேண்டும் என்றும் இதுதொடர்பாக தமிழக அரசு நாளை காலை 11 மணி அளவில் தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் இது தொடர்பாக மனு கொடுக்க இருக்கிறார்கள் . விவசாயி அணி உட்பட அனைத்து முக்கிய நிர்வாகிகளும் என்ன மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் ஆங்காங்கே அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆட்சியர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.