நீட் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 3 வார காலத்திற்கு ஆவது தீ வைக்க வேண்டும் என்று கோரி சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஒருசில மனுக்கள் அடுத்த மாதத்திற்கு தேர்வு வைக்குமாறும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு இருந்த நிலையில் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஏற்கனவே ஜேஇஇ தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது . இன்னும் சில நாட்களே நீட் தேர்விற்கு உள்ளது. இந்தத் தருணத்தில் எங்களால் எதுவும் செய்ய இயலாது என்றும் ஏற்கனவே இந்த நீட் தேர்வு சம்பந்தமான வழக்குகளை தள்ளுபடி செய்து இருக்கிறோம் எனவும் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து இருக்கிறோம் எனவே இந்த தருணத்தில் நீட் தேர்வு தொடர்பான எந்தவொரு வழக்குகளையும் விசாரணை நடத்த முடியாது என கோரி மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டிருக்கிறது. மனுதாரர்கள் சார்பில் பல்வேறு முக்கியமான கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

குறிப்பாக ஜெ இ இ தேர்வுகளில் நிறைய மாணவர்கள் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. நிறைய மாநிலங்களில் ரயில் சேவைகள் எதுவும் தொடங்காமல் இருக்கும் நிலையில் லட்சக்கணக்கான மருத்துவ மாணவர்களின் கனவானது கலைந்து போகும் கூடிய சூழல் இருக்கிறது. எனவே அதற்காகவாவது இந்த அனைத்து பேருந்து சேவைகள் ரயில் சேவைகள் தொடங்கும் வரை இந்த தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் எதையும் கருத்தில் கொள்ளாமல் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டு இருக்கிறார்கள்.