இலங்கைக்கு அருகில் இந்தியன் ஆயில் நிறுவனம் வாடகைக்கு எடுத்து இருந்த கச்சா எண்ணெய் கப்பலில் தீப்பற்றிய நிலையில் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குவைத்திலிருந்து இந்தியாவின் ஒரிசா விற்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த 'எம்டி நியூ டைமண்ட் ' என்ற கப்பல் இலங்கை அருகே திடீரென தீப்பிடித்தது. தீ அணைக்கும் முயற்சியில் இலங்கைக் கப்பல்கள் மேற்கொண்ட நிலையில் இதனுடன் இந்திய கப்பல்களும் இணைந்து பணியை விரிவுபடுத்தினர். இதுதவிர இலங்கை துறைமுகத்தில் நின்றிருந்த இரு ரஷ்ய கப்பல்களும் தீயை அணைக்கும் பணியில் சேர்ந்து கொண்டுள்ளனர்.

கப்பலில் இருந்த 24 பேரில் ஒருவர் இறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ஜின் அறையில் இருந்த கொதிகலன் வெடித்ததில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த நபர் இருந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. என்ஜின் மற்றும் பணியாளர் அறைகளில் இருந்த தீ கட்டுப்படுத்தப்பட்டதாகவும் மற்ற பகுதிகளில் தீயணைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதற்கிடையில் சௌரியா மற்றும் சாரன் ஆகிய கப்பல்கள் தீயணைப்புப் பணியை மேற்கொண்டிருப்பதாகவும் டார்னியர் ரக விமானம் மேலிருந்து கண்காணித்து வருவதாகவும் இந்திய கடலோர காவல்படை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தவிர கச்சா எண்ணெய் கசிந்து சுற்றுச்சூழல் பாதிக்கப் படாமல் இருப்பதை உறுதிப்படுத்த விசாகப்பட்டினத்திலிருந்து ஒரு கப்பல் செல்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கலந்தால் பேராபத்து ஏற்படும் என்பதால் அதை தடுப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குவைத்தின் வினா அல் துறைமுகத்திலிருந்து 2 லட்சத்து 70 ஆயிரம் டன் கச்சா எண்ணையுடன் புறப்பட்ட கப்பல் இலங்கையின் அம்பாறை அருகே கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது தீப்பிடித்தது. இக்கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் ஒடிசா மாநிலம் பாரதீட்டில் உள்ள இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு ஆலைக்கு கொண்டு செல்லப்பட இருந்தது.