மல்டி பிளக்ஸ் தியேட்டரின் உரிமையாளர்கள் தியேட்டர்களை திறக்க அனுமதி கோரி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடந்த 5 மாதங்களுக்கு மேலாகவே நாடு முழுவதும் கொரோனாவின் அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மார்ச் 19ந் தேதியில் இருந்தே தியேட்டர்களை மூட உத்தரவு போடப்பட்டது.

தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கூட தியேட்டர்களை திறக்க அனுமதி கொடுக்கவில்லை என்று வருத்தத்தில் உள்ளனர் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களின் உரிமையாளர்கள்.
தியேட்டர் தொழிலாளர்களின் வாழ்வை காக்கவும், தியேட்டர் அதிபர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றவும் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களை திறக்கவேண்டும் என்று உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் 5 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு தளர்க்கப்பட்டு வருகின்றது ஓட்டல்கள், மால்கள், திறக்கப்பட்டுள்ளது எனவும் இதே போன்று மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்களை திறக்கவும் அனுமதிக்க வேண்டும். தியேட்டர்களில் அரசு விடுத்துள்ள அனைத்து விதிகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றியும் தியேட்டர்கள் இயங்கும் என்று கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தியேட்டர் மூடலால் வேலை இழந்துள்ளனர். அவர்களின் நலன் கருதியும், திரைத்துறை சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டும் அரசு மல்டி பிளக்ஸ் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இவர்களின் இந்த வேண்டுகோளுக்கு அரசு செவி சாய்க்குமா..?