சேகர் ரெட்டிக்கு எதிரான ஊழல் வழக்கை ஆதாரம் இல்லை என முடித்து வைத்து அதிமுகவிற்கு பாஜக பரிசளித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் துண்டுச் சீட்டை வைத்து துப்பு துலக்கும் ஆற்றல் சி.பி.ஐ 2000 ரூபாய் நோட்டுக்கள் எந்த வங்கியில் இருந்து கொடுக்கப்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு வங்கி அதிகாரியை கூட வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கவில்லை என உயர்நீதிமன்றமே கேள்வி கேட்கும் அளவிற்கு ஒரு விசாரணையை நடத்திய இப்படி ஒரு சிறப்பு கிடைத்திருக்கிறது என்றால் இந்தப் பரிசை வழங்கியது சி.பி.ஐ என்ற அமைப்பு என்பதைவிட மத்திய பாஜக அரசு தான் என அடித்துச் சொல்ல முடியும் என ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

கரூர் அன்புநாதன் விவகாரம், குட்கா டைரி, ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடு, பொள்ளாச்சி பாலியல் கொடுமை, கொடநாடு கொலைகள் உள்ளிட்ட அனைத்திலும் இ.பி.எஸ் ஓ.பி.எஸ் தலைமையிலான இந்த அரசை பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்றுவது ஏன் எனவும் வினவியுள்ளார்.