பெரியார் சிலையை அவமதிப்பதால் அவ்வாறு செய்பவர்களுக்கு தான் சிறுமை என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் கே.என் நேரு. திமுக ஆட்சிக்கு அந்தப் பின் அவ்வாறு செய்ய இயலுமா என சவால் விடுத்துள்ளார். திருச்சி அருகே இனாம் குளத்தூர் சமத்துவபுரத்தில் காவி சாயம் பூசப்பட்டு பின்னர் சுத்தப்படுத்தப்பட்ட பெரியார் சிலைக்கு முன்னால் அமைச்சரும் , முதன்மை செயலாளருமான கே.என் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விரைவில் தேர்தல் வர உள்ளதால் பெரியார் சிலையை அவமதிக்கும் தவறுகளை சிலர் செய்து வருவதாக குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் பேசியதாவது, தொடர்ந்து ஒரு இடம் 2 இடம் அல்ல கட்சியை வளர்ப்பதாக எண்ணி அவர்கள் ஆள் சேர்த்துக்கொண்டு , ஆங்காங்கே இருக்க கூடிய திராவிட இயக்க தலைவர்களின் மீது பொய்யாக பிரச்சாரம் செய்வதும் , சிலைகளை சேதப்படுத்துவதும், அசிங்கப்படுத்துவதும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதைச் செய்யச் செய்ய திமுக தான் வெற்றி பெறும் எனவும் தளபதி தான் முதலமைச்சராக வருவார் எனவும் அன்றைக்கு இந்த ஊரில் இருப்பவர்கள் தைரியமாக அன்று செய்தால் என்ன நடக்குமென்று பாருங்கள் எனவும் அவர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.