திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் சார்பாக வேட்புமனு தாக்கலானது தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல த திமுகவினுடைய பொருளாளர் பொறுப்பிற்கு டி ஆர் பாலு சார்பாக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. திமுகவினுடைய பொதுக்குழு உறுப்பினர் களாக தாமு அன்பரசன், ராஜா, கருணாநிதி ஆகியோர் தாக்கல் செய்திருக்கிறார்கள். திமுக பொதுக்குழு வரும் 9ம் தேதி கூறுகிறது . பொதுக்குழு கூடுவதற்கான காரணம் திமுகவில் காலியாக இருக்க கூடிய பொதுச் செயலாளர், பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்காகவே இந்தப் பொதுக்குழு கூடுகிறது.

அதற்கு முன்னதாக யார் யாரெல்லாம் போட்டியிட விருப்பப்படுகிறார்கள் என்று விருப்ப மனு விநியோகமினது நேற்று முதல் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. இன்று பொதுச் செயலாளர், பொருளாளர் பொறுப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. இதுவரை பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு துரைமுருகன் சார்பாகவும், பொருளாளர் பொறுப்பிற்கு டி ஆர் பாலு சார்பாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கிறது. இன்று காலையில் அவர்கள் இருவர் சார்பாக வேட்புமனுவானது தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் தாமு அன்பரசன், ராஜா, கருணாநிதி ஆகிய மூன்று பேர் துரைமுருகன் மற்றும் டி ஆர் பாலு ஆகிய இருவரின் சார்பாக வேட்பு மனுவை தாக்கல் செய்து இருக்கின்றனர். தொடர்ந்து டி ஆர் பாலு துரைமுருகன் ஆகியோர் நேரிலும் வந்து தங்களது சார்பாக வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இருக்கின்றனர். பொறுப்பிற்கு ஒருவர் தவிர்த்து கூடுதலாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தால் தான் பொதுக்குழுவில் தேர்தலானது நடைபெறும்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவர்கள் தேர்தலினிடையே தேர்வு செய்யப் படக் கூடிய ஒரு நிலையாக காணப்படும். திமுகவைப் பொறுத்த வரை தலைமைப் பொறுப்பிற்கு இதுவரை தேர்தலின்றி ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்யக் கூடிய நிலை தான் காணப்படுகிறது. எனவே திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி ஆர் பாலுவும் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்படுவது இதன் மூலம் உறுதியாகிருக்கிறது . திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர் கூட்டமானது காணொளி வாயிலாக தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தைப் பொருத்தவரை நடைபெறுவதற்கான காரணம் வருகின்ற 9ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழு தான் காரணம். தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக பொதுக்கூட்டம் ஒன்றை காணொளி வாயிலாக திமுக நடத்துகிறது. இந்தப் பொதுக் குழுவில் பொதுச் செயலாளர் பொருளாளர் இரண்டு முக்கிய பொறுப்பு களுக்கான தேர்வும் நடைபெறுகிறது.