மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது ஆ.ராசா வாழ்க என்று முழக்கமிட்ட திமுக தொண்டர் ஒருவரை நாய் என்று கூறி அக்கட்சியின் எம்.பி ஆ.ராசா தூக்கி வெளியே போடுமாறு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா பேசிக்கொண்டிருந்தார். விவசாய சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் என்று கூறி சில கருத்துக்களை அவர் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு திமுக தொண்டர் திடீரென்று ஆ.ராசா வாழ்க என்று முழக்கமிட்டதால் ஆ.ராசாவின் பேச்சுக்கு இடையூறு ஏற்பட்டது.

அதனால் கோபமடைந்த ஆ.ராசா அந்த திமுக தொண்டரை நாய் என்று குறிப்பிட்டதுடன் அவனை தூக்கி வெளியே போடுங்க என்று உத்தரவு பிறப்பித்தார். அவர் பேசியதாவது நாமெல்லாம் விவசாய வீட்டுப் பிள்ளைகள் என்று கூறியபோது வாழ்க என்று முழக்கமிட்ட திமுக தொண்டரை நாய் என்று கூறியதுடன் , அவரை வெளியே தூக்கி போடுமாறு ஆ.ராசா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.