திமுகவில் ஆ .ராசா மற்றும் பொன்முடி ஆகியோர்களுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . காணொளி வாயிலாக நடைபெற உள்ள திமுக பொதுக்குழுவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு மூன்று பேர் இருக்கவேண்டும் என்ற விதியில் மாற்றம் அந்தப் பதவிகளுக்கு ஐந்து பேர் நியமிக்கலாம் என திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. துணைப் பொதுச் செயலாளர்களாக ஐ. பெரியசாமி ,அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ளனர்.

கட்சி விதியில் திருத்தம் செய்து ஆ ராசா மற்றும் பொன்முடி ஆகியோருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவிகளை வழங்க வாய்ப்பிருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக துரைமுருகன் பொருளாளராக டி.ஆர் பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.