பொதுக்குழுவில் உதயநிதி பேசியதாவது: நான் பொதுக்குழுவில் பங்கேற்றுக்கொண்டாலும் , எனக்கு முதல் வாய்ப்பு கொடுத்ததற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இது பொதுக்குழுவில் என்னுடைய முதல் பேச்சு , ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளவும் எனவும் எனக்கு பேசியதற்கு வாய்ப்பு கொடுத்த மாமா துரை முருகன் அவர்களுக்கும் டி ஆர் பாலு மாமா அவர்களுக்கும் ஏனென்றால் எனக்கு சும்மா கொடுத்து இருக்கமாட்டார்கள் வாய்ப்பு தலைவர் வந்து இளைஞரணி சார்பாக வாழ்த்து சொல்ல வேண்டும் என்று சொல்லி பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

அவர்களை வாழ்த்துவதற்கு எனக்கு வயது கிடையாது எனவும் ஏனென்றால் துரைமுருகன் மாமாவாக இருக்கட்டும் டி ஆர் பாலு மாமாவாக இருக்கட்டும் கோபாலபுரத்தில் எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிருந்து முத்தமிழறிஞர் கலைஞரோடு பயணித்தவர்கள் என்றும் இப்போது நம் கலைஞருடைய மறு உருவமாக இருக்கக்கூடிய தலைவர் அவர்களுக்கு இடது புறமாகவும் வலது புறமாகவும் பயணிக்க இருக்கிறார்கள் எனவும் எனக்கு தலைவர் அவர்கள் கொடுத்திருக்கும் இந்த பொறுப்பு வாழ்த்த வயதில்லை உங்களோடு சேர்ந்து உங்கள் வழியில் நாங்கள் நடப்போம் எனவும் தலைவர் அவர்களுக்கு ஜூம் செயலியை கண்டுபிடித்தவர்கள் ராயல்டி கொடுத்தே ஆக வேண்டும் .ஏனென்றால் ஒரு பொதுக் குழுவையே ஜூம் காலில் நடத்தி முடித்துவிட்டார் . நானும் நான்கு ஐந்து மாதங்களாக களத்தில் இறங்கி பணியாற்ற முடியாமல் ஜூம் கால் மூலமாக இளைஞர் அணி நிர்வாகிகளை, களப்பணியாளர்களை எல்லாம் சந்தித்துக் கொண்டுள்ளேன்.

ஒரு 65 ஜூம் கால் நடத்தி முடித்து விட்டேன் என்று கூறியவர் தலைவரிடம் போய் சொன்னேன் அவர் 250 ஜூம் கால் முடித்து விட்டதாக என்னிடம் கூறினார். நான் யாரிடம் பேசினாலும் மருத்துவர் ஆக இருக்கலாம் களப்பணியாளர்களாக இருக்கலாம் யாரிடம் பேசினாலும் அவர்கள் நான் தலைவரிடமே பேசிவிட்டேன் என்று கூறினார்கள். ஏனென்றால் தலைவரிடம் எதுவும் மறைக்க முடியாது. எல்லாரிடமும் நேரடி தொடர்பில் இருக்கிறார் தலைவர் எனவும் அந்த அளவிற்கு ஜூம் கால் மூலமாக கழகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் எனவும் என்னுடைய உரையை கூறி முடித்தார் உதயநிதி ஸ்டாலின்.