திமுகவில் அதிகாரமிக்க ஒரு அமைப்பு என்றால் அது பொதுக்குழு தான் என சொல்லுவார்கள். அப்படிப்பட்ட பொதுக்குழு கூட்டம் முதன்முறையாக காணொளி காட்சி மூலம் கூட இருக்கிறது.1949 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்ட விதிகள் படி ஆண்டுதோறும் பொதுக்குழு கூடுவது வழக்கம்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கட்சியின் தலைவர் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வுகளுக்கான தேர்தலும் நடைபெறும். கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் அரசியல் ரீதியான முடிவுகளும் கூட பொதுக்குழுவில் தான் எடுக்கப்படும். அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த பொதுக்குழு இந்த முறை காணொளி காட்சிகள் மூலம் நடைபெறுகிறது. ஆனாலும் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் உள்ள கட்சி அலுவலகங்களில் குழுவாக செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கலாம் என்கிறார் கட்சியின் செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன். அண்ணன்தான் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள், அந்தப் பொதுக் குழுவிற்கு தகுதி உள்ளவர்கள் அந்தந்த மாவட்டத்திலேயே இருப்பார்கள். அது ஒரு 50 பேர் கொண்ட குழுவாக தான் இருக்கும்.

ஒரு மாவட்டத்திற்கு அவ்வளவு பேர்தான் வருவார்கள். அனைவரும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டாலும் உட்கட்சி விவகாரம் கூட்டணி குறித்த கருத்துக்கள் உள்ளிட்ட சில முக்கிய விவகாரங்களை அரங்கில் விவாதிப்பது போல ஆன்லைனில் விவாதிப்பது தொண்டர்களுக்கு ஒருவித தயக்கத்தையும் உண்டாக்கலாம் என்கிறார் பத்திரிகையாளர் கணபதி.