மலையாள திரையுலகில் ‘பிரேமம்’படத்தின் மூலம் மலர் டீச்சராக அறிமுகமாகி தென்னிந்திய ரசிகர்கள் மனதில் முதல் படத்திலேயே தடம் பதித்தவர் தான் சாய் பல்லவி.

கடந்த 2016 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்த இவர் அதன் பின் சினிமாவில் முழு நேரமாக கவணம் செலுத்த துவங்கி தமிழ், தெலுங்கு என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தார். அதே சமயம் தனது மேற்படிப்பையும் கவணித்து வந்த இவர் இரண்டிலும் அக்கறையை காட்டி தோல்வியை சந்திக்காமல் இருந்து வந்தார்.

இந்த கொரோனா லாக்டவுனிலும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு வந்து தேர்வு எழுதிவிட்டுச் சென்றார். அப்போது அவரை அடையாளம் கண்டுகொண்ட மாணவர்கள் அவருடன் இணைந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.