ஒலியை விட ஆறு மடங்கு வேகத்தில் ஏவுகணைகளை விண்ணில் சீறிப் பாய செய்யும் ஹைப்பர் சோனிக் ஏவுதள வாகனம் இந்தியாவில் வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. இது மிகப்பெரிய தொழில்நுட்ப முன்னேற்றம் என்று டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஹைபர்சோனிக் டெஸ்ட் டெமான்ஸ்ரேட்டர் எனப்படும் ஏவு வாகனத் தை வடிவமைத்துள்ளது.

இது ஒடிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் ஏபிஜே அப்துல் கலாம் சோதனை தளத்தில் வைத்து 11.05 மணிக்கு பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. அக்னி ஏவுகணை பூஸ்டரை பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த சோதனை ஐந்து நிமிடங்களே நீடித்தது. இந்த உள்நாட்டு தொழில்நுட்பம் ஒளியின் வேகத்தை விட ஆறு மடங்கு வேகத்தில் பயணிக்கும் ஏவுகணைகளின் வளர்ச்சிக்கு உதவும் சோதனை முயற்சி வெற்றி பெற்றதையடுத்து அமெரிக்கா ரஷ்யா சீனா உள்ளிட்ட ஹைப்பர் சோனிக் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேருகின்றது.

இது மிகப்பெரிய தொழில் நுட்ப முன்னேற்றம் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ஜி .சதீஸ் ரெட்டி பெருமிதம் தெரிவித்தார். ஹைப்பர் சோனிக் தொழில்நுட்பம் வெற்றிபெற்று இருப்பதற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.