கியாட்கியூ என்ற புதிய ரக வைரஸ் இந்தியாவில் பரவியுள்ளதாக புனேவில் உள்ள ஐ.சி.எம்.ஆர் ன் வைராலஜி ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் இருந்து பெறப்பட்ட 833 ரத்த மாதிரிகளில் கர்நாடகாவைச் சேர்ந்த 2 பேரின் மாதிரிகளில் இந்த வைரசுக்கான ஆன்ட்டி பாடீஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த வைரஸ் சீனா மற்றும் வியட்நாமில் பெருமளவில் காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் பன்றிகளி டமும், மைனா போன்ற பறவைகளிடமும் இது காணப்படுவதால் இந்த வைரசால் பொது சமூகம் தொற்றுக்காளாகும் ஆபத்து உள்ளதாகவும் கருதப்படுகிறது. மூன்று விதமான கொசுக்கள் மூலம் இது மனிதர்களுக்கு பரவை வாய்ப்புள்ளதாக ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது.