ஆகஸ்ட் மாதத்தில் கார் விற்பனை வேகம் எடுத்திருப்பதாக பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளையில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை குறைந்திருப்பதாகவும் பல நிறுவனங்கள் கூறுகின்றனர். மாருதி சுசுகி நிறுவனம் தன் உள்நாட்டு விற்பனை 20.2% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆகஸ்டில் மட்டும் ஒரு லட்சத்தி 16ஆயிரத்து 704 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

38 ஆயிரத்து 205 வாகனங்களை விற்றுள்ள ஹூண்டாய் நிறுவனம் தன் நிறுவனம் 19 .9%உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் 13 ஆயிரத்து 507வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதன் உள்நாட்டு விற்பனை 1% உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதேசமயம் டொயோட்டா நிறுவனம் 48% குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆகஸ்டில் 5 ஆயிரத்து 555 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது.

கார் நிறுவனங்களின் புதுவரவான எம்ஜி மோட்டாரின் விற்பனை41.2% அதிகரித்துள்ளது. ஆகஸ்டில் 2851 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இருசக்கர வாகன பிரிவில் நாட்டின் முதல் பெரிய உற்பத்தியாளர் ஆன ஹீரோ மோட்டோகார்ப் தன் விற்பனை 8.52% உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் ஆகஸ்டில் 5 லட்சத்து 68 ஆயிரத்து 674 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் விற்பனை 1% குறைந்து 3 லட்சத்து 21ஆயிரத்து 58ஆக உள்ளது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 338 வுகனங்கள் மட்டுமே விற்பனை செய்து உள்ளதால் அதன் விற்பனை ஒரு சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.