உடல்நலக் குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சீமானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் அவர்களுக்கு உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் அவர் வடபழனியில் உள்ள சிங்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் ஒரு மருத்துவக் குறிப்பு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 53 வயதாக கூடிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருக்கு தற்போது உடல்நிலை பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் பரிசோதனைக்காக தற்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவரது தரப்பிலிருந்து வழக்கமான பரிசோதனைக்கு செல்வதாக சொல்லியிருக்கிறார்கள். அவருக்கு அங்கு ஈசிஜி உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் டயாக்னாசிஸ் செய்யப்பட்ட பிறகு அடுத்த கட்ட முடிவுகள் மருத்துவ குறிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு கொரோணா தொற்று இருக்கிறதா என்றும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.