முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை நடத்த விரும்பினால் பல்கலைக்கழகங்கள் நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இறுதி செமஸ்டர் மட்டுமே கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அது பல்கலைக்கழகங்களின் கையில் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவர் களுக்கு செமஸ்டர் தேர்வுகளை நடத்த விரும்பினால் நடத்தலாம் என்ற அனுமதியை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. உணராத இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் மட்டுமே கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மற்ற செமஸ்டர் களை நடத்தவும் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் சில அமைப்பு மாணவர்கள் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சில பல்கலைக்கழகங்களில் முதலாமாண்டு இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகளையும் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கொரோனா அச்சுருத்தல் காலத்தில் பல்வேறு மாநிலங்களில் இந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி இந்தத் தேர்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பல்கலைக்கழகங்கள் தனிப்பட்ட முறையில் அவர்கள் தேர்வை நடத்த விரும்புகிறார்கள் என்றால் ஏற்கனவே யுஜிசி அமைப்பு கொடுத்திருக்கக்கூடிய வழிகாட்டுதலின் படி அவர்கள் தாராளமாக தேர்வுகளை நடத்தி கொள்ளலாம் . ஏனென்றால் இறுதியாண்டு தேர்வு நடத்தப்படுகிறது என்றால் அதே ஆண்டு தேர்வுகள் போல தானே முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு எனவே தேர்வுகளை நீங்கள் நடத்திக்கொள்ளலாம் அதற்காக நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை , தேர்வுகளை நடத்துவதும் நடக்காததும் பல்கலைக்கழகங்களின் விருப்பம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் என்னென்ன வழிபாட்டு நெறிமுறைகள் இருக்கிறதோ அவை அத்தனையும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்பதையும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியிருக்கிறார்கள். மனுவானது தள்ளுபடி செய்யப் பட்டிருக்கிறது. முன்னதாக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்தக்கூடாது கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் மாணவர்களுக்கு அது பொது சுகாதார பிரச்சனையாக ஏற்பட்டுவிடும் என்று மகாராஷ்டிரா மேற்கு வங்கம் அரசுகள் சார்பில் கூட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்ட போது கூட உச்ச நீதிமன்றம் அதனை கருத்தில் கொள்ளவில்லை. கட்டாயம் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு வெற்றி என்பது கொடுக்கக்கூடாது என்று சொல்லி இருந்தார்கள். தற்போது அது போலவே முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு வழங்கப்பட்டிருக்கிறது.