கிசான் திட்டத்தில் தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் இதனை அவர் கூறினார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வளர்ச்சி பணிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 12 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 7528 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கோரோனா தடுப்பு பணி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் திருவள்ளூர் ,சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கோரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

பின்பு பேசிய அவர் கிசான் திட்டத்தில் மத்திய அரசு சில சலுகைகளை அறிவித்திருந்தது. அதை தவறாக பயன்படுத்தி சிலர் நிதியுதவிகளை பெற்றுவிட்டனர். எங்கெங்கெல்லாம் தவறு நடக்க பட்டிருக்கின்றதோ அங்கே அதற்காக தனிக்குழு அமைத்து பணத்தை திரும்பப் பெறுதல் மற்றும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.