பப்ஜி செயலிக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்கிறார்கள் மொபைல் கேமில் ஆர்வம் இருக்கும் இளைஞர்கள். அதே நேரத்தில் இத்தகைய செயலிக்கு தடை விதிக்கப்படுவது வரவேற்கத்தக்கது என்கிறார்கள் சைபர் கிரைம் வழக்கறிஞர்கள் . பப்ஜி கேம் விளையாடுபவர்களுக்கு விறுவிறுப்பாகவும் த்ரில்லாகவும் இருக்கும் . அதே நேரத்தில் பப்ஜி யில் பிள்ளைகள் மூழ்குகவதால் பெற்றோருக்கு ஒரு வித அச்சமும் இருந்துகொண்டேதான் இருக்கும். நீண்ட நாட்களாக பப்ஜிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில் அதற்கான தடை மொபைல் கேம் விளையாட்டில் ஆர்வம் கொண்டோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

மறுபுறம் மொபைல் கேமுக்கு அடிமையாவதி லிருந்து விடுபட முடியும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இன்றைய தொழில்நுட்ப உலகில் அனைத்து தனிநபர் விவரங்களும் மொபைல் போனில் சேகரிக்கப்படுவதால் பப்ஜிக்கான தடை வரவேற்கத்தக்கது என்கிறார்கள் சைபர் கிரைம் வழக்கறிஞர்கள். சைபர் கிரைம் வழக்கறிஞர் பப்ஜி பற்றி பேசுகையில் "இது பப்ஜி மட்டும் கிடையாது, நிறைய கேம் இதுமாதிரி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் வளர்ச்சியை முற்றிலும் தடுக்கும் ஒரு கருவியாகவே உள்ளது. சைனா மட்டும் தான் தயாரித்து அனுப்புகிறார்கள் என்று கிடையாது. இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க பல நாடுகள் இந்த மாதிரியான கேம்களை உருவாக்கி வருகின்றனர். சைனாவில் உள்ள தயாரிப்பாளர்களை ஊக்குவித்து இந்த செயலை செய்ய வைக்கிறார்கள்.

இந்த மாதிரி அப்ளிகேஷனை இந்தியாவில் டெவலப் பண்ண இன்ஜெக்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் என் மனது கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. மொபைலில் பல்வேறு விதமான கேம் ஆப்புகள் இருந்தாலும் பப்ஜி கேம் என்பது சிறியவர்கள் இளைஞர்களின் இயல்பான பழக்கவழக்கங்களை வெகுவாக பாதித்திருந்தது . தற்போதைய தடை அதிலிருந்து அவர்கள் மீள வழி வகுக்கும் என பெற்றோர் நிம்மதி அடைகிறார்கள்.