எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பு அறிக்கையில் , திருவண்ணாமலை மாவட்டம் என்று சொன்னாலே அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் தான் அனைவருக்கும் நினைவு வரும். இன்றைக்கு தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றாக திகழ்வது அருணாசலேஸ்வரர் ஆலயம். அது திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் கோவில் ஆகும். இன்றைக்கு இந்தப் புனிதமான இடத்திலே ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இன்றைக்கு இறைவனுடைய அருளால் தமிழகம் பல்வேறு வளர்ச்சிகளை அடைந்து கொண்டே இருக்கின்றன. இன்றைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆலோசனை கூட்டம் ஒரு பொருத்தமான இடத்தில் பொருத்தமான காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதான தொழிலாக இருப்பது விவசாய வேளாண் தொழில். பெரும்பாலான மக்கள் சுமார் 60 சதவிகித மக்கள் வேளாண் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிரதான தொழிலாக இருக்கக்கூடிய இந்த வேளாண்மை தொழில் நெல் உற்பத்தி அதிகம் காணும் மாவட்டங்களில் ஒன்றாக திருவண்ணாமலை திகழ்கிறது. அரிசிக்கு பெயர் பெற்ற மாவட்டம் திருவண்ணாமலை இந்த அரிசிக்கு தனிச்சிறப்பு உண்டு தமிழகத்திலே. அப்படியே உற்பத்தி செய்கின்ற வேளாண் தொழிலாளர்களை வணங்கி , அதேபோல கைத்தறி தொழில் நிறைந்த பகுதி. நெசவாளர் மக்கள் நிறைந்த பகுதி இந்த திருவண்ணாமலை மாவட்டம். ஆரண்ய பட்டு என்றால் தமிழகத்திற்கு மட்டுமல்ல உலகத்திற்கே தெரியும் அந்த அளவிற்கு இந்தப் பட்டிற்கு அந்தஸ்து இருக்கிறது. அப்படி பட்டு உற்பத்தி செய்யக்கூடிய மாவட்டம் இது. இதனால் அந்த பட்டிற்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக இயற்கை எழில் கொஞ்சும் ஜவ்வாது மலை இருக்கின்றது எனவும் இந்த ஜவ்வாது மலையில் மலைவாழ் மக்கள் அதிக அளவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த மலைவாழ் மக்களுக்கு மாண்புமிகு அம்மாவின் உடைய அரசு ஏராளமான திட்டங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்த மக்களுடைய குழந்தைகள் நல்ல கல்வியறிவு பெற வேண்டும் என்பதற்காக உண்டு உறைவிடப்பள்ளி உருவாக்கப்பட்டு , இன்றைக்கு மலைவாழ் மக்கள் குடும்பத்தில் பிறந்த மாணவ மாணவிகள் சிறந்த கல்வி கிடைப்பதற்கான சூழலை நாங்கள் உருவாக்கிக் கொடுத்து இருக்கின்றோம். நாம் விரும்பி உண்ணும் சிறு தானிய வகைகளை இங்கிருந்துதான் தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கிறார்கள் எனவும் தேன் உற்பத்தியில் ஜவ்வாது மலைவாழ் மக்களின் பங்கு அளப்பரியது எனவும் அவர் கூறியுள்ளார்.