செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 'மன்னவன் வந்தானடி' திரைப்படம் மீண்டும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முதலில் காமெடி நடிகராக கலக்கிய சந்தானம் 2014ல் ‘வல்லவனுக்கு புல்லும்’ ஆயுதம் படத்தில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்து ஹிட் கொடுத்தார். காமெடி நடிகராக மக்களிடையே இடம் பிடித்த இவர் நான்கு ஐந்து படத்தில் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடித்து அசத்தி ஹீரோவாக தன்னை மக்கள் ஏற்க செய்தார். அதன்பிறகு வரிசையாக இவருக்கு படங்கள் நடிக்கும் வாய்ப்புகள் வந்தும் கூட சில படங்கள் கிடப்பில் போடும் நிலை உண்டானது. சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’, ‘மன்னவன் வந்தானடி’ போன்ற படங்கள் மக்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்தது.

இதில் செல்வராகவன் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘மன்னவன் வந்தானடி’ படம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்தது. படப்பிடிப்பு துவங்கி ஹைதராபாத் மற்றும் அமெரிக்காவில் நடந்து கொண்டிருந்தது. ஆனால் இடையில் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுது.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்த படம் தூசு தட்டப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்திய சந்தானத்தின் படங்கள் சிறப்பான வரவேற்பைப் பெறுவதால் வேறொரு தயாரிப்பாளர் அந்த படத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.