மதுரையில் 11 ஆயிரம் பேர் போலியான கணக்கு மூலம் கிசா நிதி உதவி பெற்று இருக்கிறார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். மதுரையில் முறைகேடு நடந்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் தற்போது தகவல் வெளியிட்டு இருக்கிறார். மதுரை மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் இதனைத் தெரிவித்திருக்கிறார். மதுரை மாவட்டத்தில் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது உறுதியாகியிருக்கிறது.

11,000 பேர் போலி கணக்குகள் மூலமாக நிதியுதவி பெற்று இருப்பது தற்போது வெளிப்பட்டுள்ளது. மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்திலே கூட்டம் நடைபெற்று இருக்கிறது. மதுரை மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு கண்காணிப்புக் குழுக் கூட்டமானது மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் விருதுநகர் எம்.பி ,தேனி எம்.பி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மத்திய சிறை அதிகாரிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசின் மூலம் தமிழகத்தில் செயல்படுத்திக் கொண்டு வரும் 23 திட்டங்கள் குறித்து இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. அக்கூட்டத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஒரு கேள்வி எழுப்பினார் . ஏழை விவசாயிகளுக்காக மத்திய அரசு வழங்கும் பிஎம் கிசான் நிதி உதவி திட்டத்தில் மதுரை மாவட்டத்தினில் ஏதும் முறைகேடு நடந்து இருக்கிறதா என்ற கேள்விக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் டிஜே வினய் ஒரு பதில் அளித்திருக்கிறார். மதுரை மாவட்டத்தில் 11,000 பேர் போலி கணக்கு மூலம் பிஎம் கிசன் நிதி உதவி பெற்றுள்ளனர்.

ஆர் ஆயிரம் பேரின் வங்கிக் கணக்கிலிருந்து 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் திரும்ப பெறப்பட்டுள்ளது. பிஎம் கிசன் திட்ட முறைகேடு குறித்து விசாரிக்க உயர் அதிகாரிகள் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் மூன்று நாட்களுக்குள் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு அனைத்து பணத்தையும் திரும்பப் பெறுவது குறித்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருக்கிறார். மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டில் 16 ஆயிரத்து 477 பேர் பிஎம் கிசன் நிதி உதவி திட்டத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். பதினாயிரம் பேரில் மொத்தம் 70 சதவீதம் பேர் போலியான ஆவணங்களை கொடுத்து நிதியுதவி பெற்றிருப்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இது வெறும் நடப்பு ஆண்டின் கணக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.