‘காக்கா முட்டை’ படத்தில் நடித்து புகழ் பெற்ற விக்னேஷ், ரமேஷ் என்ற இரண்டு குழந்தைகள் தற்போது இளம் வாலிபர்களாக வளர்ந்து விட்டனர். அதன்பிறகு அப்பா, அறம் ஆகிய படங்களில் நடித்த இவர்கள் தற்போது வாலிபர்கள் ஆன நிலையில் தங்களுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் உலவிட்டு வருகின்றனர்.

ஊரடங்கு சமயத்தில் போரடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ரசிகர்களுடன் தங்களது நேரத்தை செலவிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பெரிய காக்கா முட்டையாக நடித்த விக்னேஷ் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, நீங்கள் ஹீரோவாக நடித்தால் யார் ஹீரோயின் என்ற கேள்விக்கு ஷிவானி நாராயணன் என தெரிவித்துள்ளார். அதேபோல் மிகவும் கவர்ச்சியான நடிகை யார் என்று கேட்டதற்கும் ஷிவானி பெயரையே குறிப்பிட்டுள்ளார்.

உங்களுடைய க்ரஷ் யார் என்று கேட்டதற்கும் ஷிவானி நாராயணன் பெயரையே தெரிவித்துள்ளார். இதிலிருந்து விக்னேஷ், ஷிவானியை ரிகுலராக சமூக வலைதளத்தில் ஃபாலோ செய்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.