இறுதியாண்டு தேர்வு களை பல்கலைக்கழகங்கள் இணைய வழியிலேயே நடத்த தமிழக உயர்கல்வித் துறை அறிவுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான இணைய வழி முறையில் நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பெரிய நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. சரியான விடைகளை தேர்வு செய்து எழுதும் வகைத் தேர்வாக நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.

மேலும் இணைய வழியிலான தேர்வுகளை நடத்துவதற்கான அனுமதி சாந்த அமைப்புகளிடம் கோர பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவு முறையிலான இணைய வழி தேர்வில் தேர்வு எழுதும் மாணவர்களின் முகம் முதலில் அடையாளம் காணப்படும். தேர்வு எழுதும் மாணவரைத் தவிர வேறு யாரேனும் இருந்தால் அடையாளம் காணப்படும். வேறு யாரும் அறையினுள் பேசினால் கூட தெரிய வந்துவிடும். தேர்வை எழுதுபவர் அக்கம் பக்கம் திரும்புவது குறித்த எச்சரிக்கையும் தேர்வு கண்காணிப்பாளருக்கு அனுப்பப்படும். தேர்வை எழுதும் தளத்தை தவிர மற்றொரு தளத்தை திறக்க முயற்சித்தாலோ எச்சரிக்கை வழங்கப்படும். எத்தனை முறை மற்றொரு தளத்தை திறந்தார் என்றும் தெரியப்படுத்தப்படும்.

கைபேசியிலும் தேர்வை எழுத முடியும் குறைவான இணைய சேவையே போதுமானதாக இருக்குமென அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் சார்பாக தெரிவிக்கப்படுகிறது. கலை அறிவியல் படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்களும் இறுதிப் பருவத்தேர்வை இணைய வழி மட்டுமே நடத்த தமிழக அரசு தற்போது ஆலோசனை ஆலோசித்து வருவதாக நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலை அறிவியலில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் இணையவசதி இருக்குமா என்ற சந்தேகத்தால் அனைவருக்கும் இணைய வழி தேர்வை நடத்த கலை அறிவியல் பல்கலைக்கழகங்கள் சில தயங்குவதாக தெரிகிறது. கிராமப்புற பொறியியல் மாணவர்களும் இணையவழி தேர்வால் பாதிப்புக்குள்ளாகலாம் என்ற சந்தேகம் சில பொறியியல் கல்லூரிகளுக்கும் உள்ளது.