சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று தற்போது கோலிவுட்டின் முக்கிய நடிகராகவும், சிறந்த தயாரிப்பாளராகவும், பாடகராகவும், பாடலாசிரியாரவும் உயர்ந்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு நல்ல ஓப்பனிங்கும் நல்ல வசூலும் தொடர்ந்து கிடைத்து வருகிறது. இவரின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டடித்து நல்ல வசூல் சாதனை புரிந்தது, அதன் பின் வெளியான ‘ஹீரோ’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனை தொடர்ந்து இவர் ‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ உள்ளிட்ட திரைப்படங்களில் வேலைகளில் கவணம் செலுத்தி வருகிறார்.

‘டாக்டர்’ படத்தில் இருந்து அனிருத் இசையில் வெளியான பாடல்களான செல்லமா மற்றும் நெஞ்சமே உள்ளிட்ட பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த லாக்டவுனில் தாடியும் மீசையுமாக இருந்த நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது கிளீன் ஷேவ் செய்து கொண்டு பார்ப்பதற்கே செம கியூட்டாக மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட பல ரசிகர்களும் அவரை வர்ணித்து தள்ளி வருகின்றனர்