பிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இதில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார், ரிலீஸுக்கு தயார் நிலையில் இருக்கும் இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து விஜய் தனது 65வது படத்திற்காக முருகதாஸ் உடன் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஏற்கனவே விஜய் முருகதாஸ் கூட்டணியில் வெளியான கத்தி, துப்பாக்கி, சர்கார் ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்த படத்துக்கு முதலில் ‘துப்பாக்கி 2’ எனப் பெயர் வைக்க திட்டமிட்டதாக சொல்லப்பட்டது ஆனால், அதை முருகாதஸ் மறுத்தார். தற்போது இந்த படத்துக்கு ‘தளபதி’ எனப் பெயர் வைக்க எனப் படக்குழு யோசித்து வருகிறதாம். இதனடிப்படையில் இந்த படம் ஹேங்ஸ்டர் படமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.