சமீபகாலமாக கோலிவுட் வட்டாரங்களில் முன்னணி நடிகைகள் யாரும் விஜய் சேதுபதியுடன் இனைந்து நடிக்க தயாராக இல்லை என்பதே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விஜய் சேதுபதி தனது உழைப்பால் உயர்ந்து தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.வருடத்திற்கு 5லிருந்து 6 படங்கள் இவரது நடிப்பில் வெளியாகிறது.
ஆனால், ஒன்று இரண்டு படங்கள் அவருக்கு சறுக்கலைத்தான் தருகின்றது. இந்த நிலையில் அவர் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருந்த கடைசி விவசாயி, உப்பென்னா, மாஸ்டர், மாமனிதன், லாபம் ஆகிய படங்கள் அனைத்தும் OTT-யில் வெளிவரும் நிலையில் உள்ளது.

இவை வருத்தம் தரக்கூடியதாய் இருந்தாலும் விஜய் சேதுபதி உடன் நடிக்க பயப்படும் முன்னணி நடிகைகள் கூறும் காரணம் இன்னும் வருத்தத்தை தருகிறது. விஜய் சேதுபதி உடன் இணைந்து நடிக்கும்போது நடிகைகளை காட்டிலும் அவரது நடிப்பு ஒரு படி மிகையாக உள்ளது, எனவும் நடிகைகள் என்னதான் நடித்தாலும் அவர்களின் கதாப்பாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இதை காரணமாக வைத்து விஜய் சேதுபதின் படத்திற்கு வாய்ப்பு வந்தாலும் முன்னணி நடிகைகள் அதை தவிர்பதாக கூறுகின்றனர்.