செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 'மன்னவன் வந்தானடி' திரைப்படம் மீண்டும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

காமெடி நடிகராக மக்களிடையே இடம் பிடித்த சந்தானம் நான்கு ஐந்து படத்தில் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடித்து அசத்தி, ஹீரோவாக தன்னை மக்கள் ஏற்க செய்தார். அதன்பிறகு வரிசையாக இவருக்கு படங்கள் நடிக்கும் வாய்ப்புகள் வந்தும் கூட சில படங்கள் கிடப்பில் போடும் நிலை உண்டானது. இதில் செல்வராகவன் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘மன்னவன் வந்தானடி’ படம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்தது. படப்பிடிப்பு துவங்கி ஹைதராபாத் மற்றும் அமெரிக்காவில் நடந்து கொண்டிருந்தது. ஆனால் இடையில் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுது.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை தூசுதட்ட பிரபல தயாரிப்பாளர் வருண் மணியன் முன்வந்துள்ளார். சமீபத்திய சந்தானத்தின் படங்கள் சிறப்பான வரவேற்பைப் பெறுவதால் இவர் இந்த முடிவெடுத்துள்ளார், இந்த வாய்ப்பை பயன்படுத்த முடிவு செய்து சந்தானமும் செல்வராகவனும் மற்ற படங்களை தள்ளிவைத்து விட்டு இதில் கவணம் செலுத்த துவங்கிவிட்டார்கள்..