Wednesday, September 2, 2020

சம்பளத்தை உயர்த்திய வெற்றிமாறன் அதிர்ச்சியில் தயாரிப்பாளர்



இயக்குநர் வெற்றிமாறனின் சம்பளம் குறித்து அதிர்ச்சி தகவல், நடிகர் சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்திற்காக இவரின் சம்பளம் இத்தனை கோடியா...

தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பிறகு வரிசையாக இவரின் இயக்கத்தில் ‘ஆடுகளம்’, ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘அசுரன்’ என வெளியான அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட். இதனை தொடர்ந்து இவர் காமெடி நடிகர் சூரியை வந்து ஒரு படம் இயக்க போவதாக செய்திகள் வெளியானது, இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே இவர் நடிகர் சூர்யாவை ‘வாடிவாசல்’ எனும் படத்தை இயக்க போவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்காக சூர்யா தயாராகி வரும் நிலையில் வெற்றிமாறனின் சம்பளம் குறித்த தகவல் அனைவரையும் வாய்ப்பிளக்க செய்துள்ளது. அசுரன் படத்திற்காக வெற்றிமாறன் வாங்கிய சம்பளம் ரு. 6 கோடி என்றும் ‘வாடிவாசல்’ படத்திற்காக இவர் ரு. 25 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரேயடியாக இத்தனை கோடிகள் சம்பளம் உயர்த்தி இருப்பது பெரும் அதிர்ச்சியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Pages