கோலிவுட்டின் முக்கிய நடிகரான கார்த்தி பெரும்பாலும் ஒரு முறை பணியாற்றிய இயக்குனரோடு மீண்டும் பணியாற்றுவதில்லை, ஆனால் இந்த முறை தன்னுடைய முடிவை சற்று மாற்றுள்ளார் போலிருக்கிறது.

சினிமாவுக்கு வந்து 15 வருடங்களை கடந்துள்ள கார்த்தி 20 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். சில தோல்விகளுக்கு பிறகு தனது கதைத் தேர்வுகளில் அதிக கவணம் இவர் செலுத்துவதெ இதற்கு காரணம். சமீபகாலமாக கார்த்தியின் படங்கள் அபார வசூல் குவித்து வருவதால் அடுத்தடுத்து அவரை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் ஏற்கனவே கார்த்திக்கை வைத்து சூப்பர் ஹிட் படம் கொடுத்த கொம்பன் முத்தையா இயக்கத்தில் மீண்டும் ஒரு கிராமத்து படத்தில் நடிக்க உள்ளாராம் கார்த்தி.இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகம் நிறைந்த அதே சமயத்தில் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளும் மிகவும் உருக்கமாக இருக்கும்படி எடுக்கப்பட உள்ளதாம். ஏற்கனவே கடைக்குட்டி சிங்கம் படத்தில் குடும்ப செண்டிமென்ட் காட்சிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.