ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25வது படமாக உருவாகியுள்ள ‘நோ டைம் டு டை’ படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா வைரஸ் பரவலால் முதலில் மாற்றி அறிவிக்கப்பட்டது.

ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் இதுவரை மொத்தம் 24 படங்கள் வெளியாகியுள்ள நிலையில், 25 ஆவது படமாக ‘நோ டைம் டு டை’ படம் உருவாகியுள்ளது. இதில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரேக் நடித்துள்ளார். மேலும், ராய்ல்ப் பியென்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக், ஜெப்ரி ரைட் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஏற்கனவே வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி இங்கிலாந்திலும், 8 ஆம் தேதி அமெரிக்காவிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த படம் ரிலீஸ் மாற்றி இங்கிலாந்தில் வரும் நவம்பர் 12 ஆம் தேதியும், அமெரிக்காவில் நவம்பர் 25 ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் இரண்டாவது ட்ரைலர் தற்போது வெளியாகி யூட்யூப்பில் வைரலாகி வருகிறது. அந்த ட்ரைலரில் நவம்பர் ரிலீஸ் என்பதை உறுதி செய்திருந்தாலும் தேதி குறிப்பிடாமல் இருந்தது ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.