Tuesday, September 29, 2020

பாபர் மசூதி இடிப்பு வழக்கு நாளை தீர்ப்பு சிபிஐ சிறப்பு நீதிமன்றம்



பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நாளை இறுதி தீர்ப்பு வழங்க உள்ளது. அயோத்தியில் 1992 ஆம் ஆண்டு அவர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர்கள் எல்.கே அத்வானி,முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி, முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வர் கல்யாண்சிங், வினய்கட்டையா, சாதிய தம்புரா உட்பட 32 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. வழக்கு தொடர்பாக நாளை தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த 16ஆம் தேதி அறிவித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ் கே யாதவ் தீர்ப்பின் போது குற்றம் சாட்டப்பட்ட 32 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இதிலுமா பாரதியும், கல்யாண் சிங்கும் கொரோணாதொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் நாளை அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்களா என்பது தெரியவில்லை.

முன்னதாக ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வழக்கை முடித்து தீர்ப்பு வழங்கும் படி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது. அதன்பின் சிபிஐ நீதிமன்றம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மேலும் ஒரு மாதம் கெடு நீட்டிக்கப்பட்டது. இதனால் தினசரி வழக்கு விசாரிக்கப்பட்டது. மொத்தமாக 351 சாட்சியங்கள் ஆதாரங்களாக 600 ஆவணங்கள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்திருந்தது. முதல்கட்டமாக 48 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் விசாரணையின்போதே 17 பேர் உயிரிழந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Pages