விஜய் டிவியில் நல்ல டிஆர்பி ரேட்டிங் உள்ள சீரியல்களுள் பெரும் பங்கு வகிக்கிறது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இதன் மூலம் மக்களுக்கு மிகவும் பிடித்த சின்னத்திரை ஜோடியாக பிரபலமாகி கொண்டு வருகின்றனர் முல்லை மற்றும் கதிர்.

இந்த சீரியலில் முல்லை எனும் முக்கிய கேரக்டரில் நடித்து பலரின் மனதை கவர்ந்துள்ளார் சின்னத்திரை விஜே. சித்ரா. மக்களிடையே பிரபலமான சீரியல் நாயகியான இவருக்கு அண்மையில் தான் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். தனக்கென தனி ரசிகர்களை கொண்டுள்ள சித்ராவை ஒரு ரியாலிட்டி ஷோவிலிருந்து நீக்கியுள்ளதாம் விஜய் டிவி.

விஜய் டிவியில் புதியதாக ரியாலிட்டி ஷோ ஒன்று தொடங்கவுள்ளது. நடனத்தை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாகிவரும் இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளாது. இந்நிகழ்ச்சிக்கு ‘ஸ்டார் ஜோடி’ என்றும் பெயரிட்டுள்ளனர்.
இதற்காக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகள் இணைந்து ஜோடியாக நடன பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்நிகழ்ச்சி போட்டியாளர்கள் பட்டியலில் இருந்து விஜே சித்ராவை விஜய் டிவி நீக்கி விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலாவுகின்றன. இதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் இது உண்மையா என்பது குறித்தும் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதும் வெளியாகவில்லை. ஏற்கனவே ஷிவானிக்கும் சித்ராவுக்கும் இன்ஸ்டாகிராமில் வாக்குவாதம் நடந்து வரும் நிலையில் பரவிவரும் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது