மாணவர்களின் எதிர்கால தோடு தொடர்ந்து விளையாட வேண்டாம் என்று அதிமுக அரசை எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கையில் எதைச் செய்தாலும் அவசர அவசரமாக செய்து தொடர்புடைய வரை கடும் பாதிப்புக்குள்ளாக்கி வரும் எடப்பாடி பழனிச்சாமி அரசு தற்போது கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனிலும் அதே அவசர விளையாட்டை விளையாடிக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார். கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் தங்கள் முந்தைய பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தேர்வு இன்றி தேர்ச்சி என்ற அறிவிப்பு வியப்பளிப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிற்கு அகில இந்திய தொழில்நுட்ப குழு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி இருப்பதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் இந்த கடிதம் மாணவர்கள் எதிர்காலம் குறித்து அதிர்ச்சியையும் கவலையையும் தருவதாக அவர் கூறியுள்ளார். கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்க அதிமுக அரசு கபட நாடகத்தை ஆடுகிறதா என்ற கேள்வி பெற்றோர் மனங்களில் எழுந்து இருப்பதாகவும் ஸ்டாலின் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.