காலமான பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில் அரை நூற்றாண்டுகளாக இசைத் துறையில் அபரிமிதமான சாதனை புரிந்த எஸ்.பி.பி க்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு இந்த விருதினை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இசைத்துறை சேர்ந்த லதா மகேஷ்கர் , பூபன்ஹசாரிக்கா , எம்.எஸ் சுப்புலட்சுமி, பிஸ்மில்லா கான், பீம்சென் ஜோஷி ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்கி இருப்பதையும் அந்த கடிதத்தில் ஜெகன்மோகன் ரெட்டி நினைவு படுத்தியுள்ளார்.