‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார் டைரக்டர் மணிரத்னம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது.

மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக திரிஷா, நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராயும் நடிக்கின்றனர். இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் மத்திய பிரதேசத்தில் துவங்கவுள்ளது.

படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதித்துள்ள நிலையில் வரிசையாக படப்பிடிப்புகள் தொடங்க உள்ள நிலையில் கார்த்தியின் ‘சுல்தான்’ திரைப்படமும் தொடங்கப்பட இருந்தது. ஆனால் மணிரத்னம் அதற்கு முட்டுக்கட்டை போட்டு முதலில் பொன்னியின் செல்வனை முடித்துவிட்டு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.