பொருளாதாரத்தை மீட்டெடுக்க கூடுதலாக கடன் பெற்று மக்களுக்கு செலவு செய்யுமாறு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆலோசனை வழங்கியுள்ளார். கொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அதனை மீட்டெடுக்க மத்திய அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வழங்கியுள்ளார்.

அதன்படி மிகவும் ஏழ்மையானவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஐம்பது சதவிகிதம் பேருக்கு நேரடியாக பணத்தை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து குடும்பங்களுக்கும் உணவு தானியங்களை வழங்க வேண்டும் என்றும் தேவையானவர்கள் அவற்றைப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். நாட்டின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டிற்குத் தொகையை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடன் வழங்குவதை அதிகப்படுத்த வங்கிகளுக்கு மூலதனத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் சிதம்பரம் ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடலழகர் நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை விதிகளை தளர்த்து மாறும் சர்வதேச வங்கிகளிடமிருந்து கூடுதலாக கடன் பெறுமாறும் மத்திய அரசிற்கு முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஆலோசனை வழங்கியுள்ளார்.