பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை ரத்து செய்தது குறித்து தமிழக அரசு உறுதியான முடிவை அறிவிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் மின்னஞ்சல் மூலம் கடிதம் எழுதியிருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசின் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் கூறியிருந்த நிலையில் அதே உறுதியுடன் அரியர் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக உயர் கல்வித் துறைக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு விற்குமகடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது மாணவர்களிடையே குழப்பத்தை உண்டாக்கி உள்ளதாக கூறியுள்ளார். மாணவர்கள் பெற்றோரிடையே ஏற்பட்ட குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பொறியியல் அறிவியல் தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பான தமிழக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.