‘பொன்மகள் வந்தால்’ படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ததில் இருந்து சூர்யாவுக்கு திரைத்துறை சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் ஓனர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தன்னுடைய வழியில் பயணித்து கொண்டிருக்கிறார் சூர்யா. இதனிடையே சூர்யாவின் படங்களை எக்காரணத்தைக் கொண்டும் வாங்க மாட்டோம் என ஒரு விநியோகிஸ்தர் கும்பல் தீர்மானமாக உள்ளது. இதனால் இனியும் விநியோகஸ்தர்கள் தொடர்ந்து குடைச்சல் கொடுத்தால் ரஜினி வழியை பின்பற்ற போவதாக சூர்யா தரப்பில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘உழைப்பாளி’ படத்தின் போது இதே போன்ற பிரச்சனைகளை சந்தித்த ரஜினி படத்தை நேரடியாக தியேட்டரில் வெளியிடப் போவதாக அறிவித்து விட்டாராம். இதனால் தியேட்டர் ஓனர்கள் விநியோகஸ்தர்களை நம்பாமல் நேரடியாக ரஜினி படத்தை வாங்கிய வெளியிட்டார்கள். இனி அதே வழிமுறையைத் தான் சூர்யா தன்னுடைய படங்களுக்கு பயன்படுத்தப் போவதாக தெரிகிறது. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி போல மாறியுள்ளது விநியோகஸ்தர்களின் நிலைமை.