முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் தகனம் செய்யப்பட்டது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதி ஊர்வலம் ஆனது தற்போது தொடங்கி லோதி சாலையில் இருக்கக்கூடிய மின் மயானத்திற்கு எடுத்து வரப்பட்டது. குறிப்பாக பாரம்பரிய குடும்ப வழக்கத்தின்படி அவருடைய மூத்த மகன் இறுதிச் சடங்குகளை செய்தார்.

கொரோனா பாதிப்பு காரணமாக முன்னாள் குடியரசுத் தலைவர் இறந்ததன் காரணமாக சுகாதார வழிபாட்டு நெறிமுறைகள் இந்த இறுதி நிகழ்ச்சியில் முழுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அவருடைய உடலானது மின்மயானத்தில் எரியூட்ட பட்டிருக்கிறது. குறிப்பாக முப்படைகளின் மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஏராளமான தலைவர்கள் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்ததின் காரணமாக குடும்பத்தை சேர்ந்த நெருக்கமான உறவினர்கள் மட்டுமே இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் தற்போது கலந்து கொண்டிருக்கின்றனர்.

அவருடைய மகன்களும் சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளின்படி பாதுகாப்பு கவச உடை அணிந்து இறுதிச் சடங்கை செய்து முடித்திருக்கிறார். அரசு மரியாதையுடன் அவரது பூத உடல் தற்போது தகனம் செய்யப்படுகிறது. ஏற்கனவே மத்திய அமைச்சரவை கூட்டம் கூடப்பட்டு பிரணாப் முகர்ஜிக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டி ருக்கிறது. மத்திய அமைச்சரவை இரங்கல் தெரிவித்து இருக்கிறது. பாதுகாப்பு நெறி முறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டு இந்த இறுதி நிகழ்வானது நடைபெற்றிருக்கிறது.