இஎம்ஐ அவகாசத்தை இரண்டு ஆண்டுகள் வரை கூட நீட்டிக்க முடியும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி பதில் அளித்து இருக்கிறது.இந்த கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் வங்கிகள் கடன் என்று சொல்லக்கூடிய இஎம்ஐ மாதத் தவணை கடன் செலுத்துவதை நிறுத்தி வைத்திருந்த ஒரு உத்தரவினை ரிசர்வ் வங்கி கொடுத்திருந்தார்கள். ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட் வைக்கப்பட்டிருந்தது. அந்த குறிப்பிட்ட காலத்தில் இஎம்ஐ செலுத்தவில்லை என்றால் அதற்கு என்ன வெட்டி செலுத்துகிறார்களோ அதற்கு உண்டான மறு வட்டி அதாவது வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டும் என்று உத்தரவும் வைக்கப்பட்டிருந்தது.

வாடிக்கையாளர்கள்  மற்றும் பொதுமக்களிடையே கடுமையான விளைவுகளையும் பாதிப்பையும் ஏற்படுத்தி வந்த நிலையில் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக உச்சநீதிமன்றம் மத்திய அரசையும் ரிசர்வ் வங்கியையும் கடுமையாக சாடி இருந்தார்கள் . இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் இருக்கும் பொழுது வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை சரியானவையாக நீங்கள் நினைக்கிறீர்களா முதலில் மக்கள் குறித்து நீங்கள் அக்கறை கொள்ளுங்கள் என்ற சரமாரியான கேள்விகளை எழுப்பி இருந்தார்கள். உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நாங்கள் இந்த கடன் தவனைகளை திருப்பித்தரும் கால அவகாசத்தை இரண்டு ஆண்டுகள் கூட எங்களால் நீட்டிக்க முடியும் என்று கூறியிருக்கின்றார்கள்.

அதுமட்டுமில்லாமல் துறை ரீதியாக எந்தெந்த துறைகள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாங்கள் அலசி ஆராய்ந்து வருகிறோம் அதற்கு ஏற்றார் போல் இந்த கடனை திருப்பி செலுத்துவதில் சில சலுகைகளை வழங்குவதற்கு நாங்கள் முன்வருவோம் என்ற தகவலை குறிப்பிட்டிருக்கிறார்கள். உடனே உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாளைய தினம் இந்த வழக்கு விரிவாக விசாரிக்கப்பட்டு நாளைய தினமே முடிவு எடுக்கப்படும் என்றும் சொல்லி இருக்கின்றார்கள். நாளை முதல் இந்த வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முறை ரத்து செய்யப்படுகிறதா இல்லை தொடரப்படுகிறதா என்ற முடிவு நாளைய தீர்ப்பில் எதிர்பார்க்கப்படும் என்று தெரிகிறது.