தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கும் நடிகர் தனுஷ். இவர் கைவசம் தற்போது கர்ணன், ஜகமே தந்திரம், வடசென்னை 2 ஆகிய படங்கள் வெயிட்டிங்கில் உள்ளது.

இந்த படங்களுக்கு பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பிலும் ஒரு படமும் கலைபுலி தாணு தயாரிப்பில் 3 படங்களும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை ராட்சசன் பட புகழ் ராம்குமார் இயக்க இயக்க இருந்தார். ஆனால், படம் கமிட்டாகி ஒரு வருடமாகியும் ராம் குமார் கதையை முடிக்காத்தால் கோபமான தனுஷ் இந்த படத்திலொ ராம் குமாருக்கு பதிலாக வேறொரு இளம் இயக்குனரை ஒப்பந்தம் செய்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை துருவங்கள் பதினாறு, மாஃபியா பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்க உள்ளாராம். ராம்குமார் படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் படத்தில் நடிக்க இருந்த தனுஷ் ராம்குமாரை ஒதுக்கிவிட்டு கார்த்திக் நரேனுடன் திடீரென கைகோர்த்து விட்டாராம். இதனால் மிகவும் வருத்தத்தில் உள்ளார் ராம்குமார். இருந்தாலும் எப்போது கதையை ரெடி செய்தாலும் தனுஷ் நடிக்க தயார் என கூறி இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.