கோலிவுட்டில் இளைஞர்களை ஊக்குவிக்கும் கதைகளாக இயக்கி பிரபலமானவர் சுசிந்திரன். இவரின் இயக்கத்தில் வெளியான நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி க்ளப் ஆகிய படங்கள் மிகவும் பிரபலம். இவர் அடுத்ததாக இரண்டு முக்கிய நடிகர்களை ஒரே படத்தில் இணைக்கவுள்ளார்.

சென்னை-28, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ஜெய். இவரது நடிப்பில் தற்போது ‘பிரேக்கிங் நியூஸ்’ எனும் படம் உருவாகியுள்ளது. அதுபோல், ஈரம், மரகத நாணயம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ஆதி. வளர்ந்து வரும் நடிகர்களான இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தை பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்குகிறார். சுசிந்திரன் இயக்கும் படங்களுக்கென தனி எதிர்ப்பார்ப்பு எப்போது இருக்கும் இந்த நிலையில் இவர் இரண்டு வளர்ந்து வரும் நடிகர்களை தனது படத்தில் ஒப்பந்தம் செய்திருப்பது மேலும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.