இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை மாற்றி அமைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு இது சம்பந்தமாக கடிதம் எழுதியிருந்தார். அதேபோல கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். தமிழகத்தில் இருந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஜீரோ ஹவர் இல் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருந்தார். கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் 50க்கும் மேற்பட்டோர் கடிதம் எழுதியிருந்தார்கள்.

இத்தனை அழுத்தங்கள் கொடுத்த பிறகு கலாச்சாரக் குழு கிட்டத்தட்ட 12000 ஆண்டு இந்திய கலாச்சாரத்தை இந்திய பண்பாட்டை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்க கூடிய இந்த குழு பாகுபாடு நிறைந்ததாக குறிப்பாக தமிழர்கள் யாரும் இல்லை, பெண்கள் யாரும் இல்லை ,தென் இந்தியர்கள் யாரும் இல்லை, சிறுபான்மையினர், அல்லது தலித்துகள் இல்லாத பாகுபாடு நிறைந்த குழுவாக இருக்கிறது என்ற இத்தனை எதிர்ப்புகளையும் கருத்தில் கொண்டு குழுவை மாற்றியமைக்க மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் மாற்றியமைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த குழுவில் புதிதாக ஒரு குழு அமைக்கப்பட உள்ளதாகவும் அதில் புத்த மதம் ,பெகின் மதம் போன்ற மதம் சார்ந்த நிபுணர்களும், மொழி சார்ந்த நிபுணர் களும் , முகலாயர்கள் மற்றும் மன்னர் பரம்பரையைச் சார்ந்த வரலாற்று ஆய்வாளர் களையும் புதிய குழுவில் இடம் பெறச் செய்யக்கூடிய திட்டங்களை முன் வைத்திருப்பதாகவும் ஆனால் இது தற்போது ஆரம்ப கட்ட நிலையில் இருப்பதாகவும் கலாச்சாரத்துறை அமைச்சகம் மற்றும் மற்ற அமைச்சகங்களுடன் கலந்தாய்வு செய்து ஆலோசித்து விரைவில் மாற்றி அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தற்போது முதல்கட்ட தகவல்களை தெரிவித்திருக்கிறார்கள்.