சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் செலுத்தாததையடுத்து கிருஷ்ணகிரியில் அரசு பேருந்துகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதால் பயணிகள் அவதியடைந்திருக்கிறார்கள் . வழக்கமாக போக்குவரத்துக் கழகம் சார்பில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்துகளில் கட்டணம் செலுத்தி பாஸ் எடுப்பது வழக்கம்.

ஆனால் பொது போக்குவரத்து கழகம் இதுவரை கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சுங்கச்சாவடி நிர்வாகம் கடந்த இரண்டு நாட்களாக அரசு பேருந்துகளை அனுமதிக்காமல் திரும்பி அனுப்புகிறது. எனவே சிரமத்துக்கு ஆளாகும் பயணிகள் சுங்கச் சாவடியை கடந்து மாற்று பேருந்தில் பயணம் மேற்கொள்கின்றனர்.

இது தொடர்பாக சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் கேட்டபோது போக்குவரத்துக் கழகம் மாதந்தோறும் செலுத்தும் கட்டணத்தை செலுத்த வில்லை என்றும் கடந்த 9 நாட்களாக பேருந்துகள் இலவசமாக அனுமதித்ததாகவும் கூறியது. வேறு வழியில்லாமல் பேருந்துகளை அனுமதிக்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.