Tuesday, September 1, 2020

காமெடி நடிகைக்கு நிச்சயம் முடிந்தது



தமிழ் ரசிகர்களுக்கு காமெடி நடிகை என்றாலே முதலில் நியாபகம் வருவது மனோரமா ஆச்சி அவர்கள் தான். அவருக்கு பிறகு கோவை சரளா ரசிகர்களை சிரிக்க வைத்தார். இன்னும் சிரிக்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறார். ஆனால், அவருக்கு பிறகு என்று யோசித்தால் ஒரு சிலர் அந்த இடத்தை பிடிக்க முயன்று வருகிறார்கள் என்பது மட்டுமே பதிலாக கிடைக்கும்.

அந்த லிஸ்டில் இணைவார் வித்யூலேகா ராமன். ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘வீரம்’, ‘மாஸ்’, ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’, ‘வேதாளம்’ உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகையாக நடித்துள்ளார். உடல் எடை கூடி குண்டாக இருந்த இவர் படிப்படியாக உடற்பயிற்சி செய்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார். அந்த புகைப்படங்களை நாம் சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம், எவ்வளவு குறைந்துள்ளார் என ஆச்சரியமும் பட்டோம்.

தற்போது லாக் டவுன் நேரத்தில் வித்யூலேகாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தங்களது திருமணம் குறித்த தகவலை விரைவில் வெளியிடுகிறோம் என நடிகை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment

Pages