9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து விடலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிகளையும் வெளியிட்டு இருக்கிறது. வைரஸ் தொற்று காரணமாக ஐந்து மாதத்திற்கும் மேலாக பள்ளிகள் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது கல்வி நிறுவனங்களே பள்ளிகளை திறந்து கொள்வதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

வரும் 21ம் தேதி முதல் பள்ளிகள் உத்தரவு பிறப்பித்திருக்கிறது மத்திய அரசு. தற்போது பள்ளிகள் திறப்பது தொடர்பாக மத்திய அரசு மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே அன்லாக் போர் பாயிண்ட் ஜீரோ என்று அழைக்கப்படும் நான்காம் கட்ட தளர்வுகளின் படி பள்ளிகளை செப்டம்பர் 21ம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் என்றும் வகுப்புகளை நடத்தக்கூடாது என்றும் மாணவர்கள் ஆசிரியர்களிடம் பாடம் சம்பந்தமான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம் என ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்திருந்தது.

அதன் வழி காட்டு நெறிமுறைகள் தற்போது மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்படி அனைத்து மாநிலங்களிலும் செப்டம்பர் 21ம் தேதி பள்ளிகளைத் திறந்து கொள்ளலாம் என மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தற்போது மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.